சந்து கடைக்கு லஞ்சம் வாங்கிய நான்கு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!!

Photo of author

By Vinoth

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்று வருவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. அதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் விசாரனை நடத்த உத்தரவிட்டனர்.

மேலும் விசாரணையில் சட்டவிரோதமாக   மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதில் கள் இறக்குபவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியது பேரூர் மது விலக்கு பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் சட்டவிரோதமாக மது விற்ற நபர்களிடம் பணம் பெற்றதற்காக பேரூர் மதுவிலக்கு பிரிவு தலைமைக்காவலர் மதன்குமார், மேலும் வடக்கிபாளையம் தலைமை காவலர் செல்வகுமார், மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்ய சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் “கோவை மாவட்டத்தில் மது விற்பவர்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் பணம் பெறும் போலீசார் மீதான புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” சூப்பிரண்டு கார்த்திகேயன் கூரியுள்ளார்.