சிலை திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி நான்கு இளைஞர்கள் பலி!!

Photo of author

By Vinoth

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் தடிப்பூர் கிராமத்தில் சிலை திறப்பு விழாவுக்கு பிளக்ஸ் பேனர் 5 இளைஞர்கள் பொருத்திக் கொண்டியிருந்தனர். அப்பொழுது எதிர்பாரத விதமாக மின் கம்பத்தின் ஒயரில் பேனர் இரும்பு கம்பி உரசியதால் இந்த இளைஞர்கள் மீது மின்சரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்தில் 4  இளைஞர்கள் பலியானார்கள். மேலும் ஓருவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர்.

மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸ் இந்த 4   பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக பாப்பண்ணா கவுடு சிலை திறப்பு விழாவுக்கு பிளக்ஸ் பேனர் பொருத்திய போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை அறிந்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எனக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுதியுள்ளது. இறந்தவரின் குடும்பங்களுக்கு எனது முழு ஆதரவு அளிப்பதாகவும் மற்றும் காயம் அடைந்த நபருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

இறந்தவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவரின் குடும்பங்களுக்கு இழப்பிடு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.