தமிழகத்தில் 14 ஐ.எ.எஸ் அதிகாரிகள்! அதிரடியாக இடமாற்றம்!

0
228

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த 14 ஐஎஸ்ஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

இதுபற்றி தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டிருக்க்கும் அறிக்கையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக, மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக, இருந்த சமீரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராக, இருந்த விஷ்ணு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக இருந்த ,மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளராக இருந்த, ஏ ஆர் பிளாட்ஸ் டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக, கே செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறை இணைச் செயலாளராக, நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த, ஜெ ஜெயகாந்தன் மீன் வளர்ச்சி கழக இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த, ஜிகே அருண் சுந்தர் தயாளன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக, நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த, கே எஸ் கந்தசாமி இ சேவை குறைதீர் அமைப்பு சிறப்பு அதிகாரியாக, நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக, எஸ் . பிரியதர்ஷினி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அகதிகள் மறுவாழ்வு, மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள், நலவாரியத்தின் இயக்குனராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Previous articleயாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த முதலமைச்சர்! அதிர்ந்து போன பாஜக!
Next articleவம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here