வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

0
149

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி திரிந்த வந்து கொண்டிருக்கின்றன. அது திடீரென நேற்று வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் ,தெருவில் நடமாடுபவர்கள் என காலை முதல் மாலை வரை பெண்கள் உள்பட 14 பேரை கடித்து குதறி உள்ளது.

மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள 6 ஆடுகளையும் 4 பசுமாடுகளையும் உட்பட மொத்தம் 13 கால்நடைகளையும் கடித்து குதறி உள்ளது.

காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் விராலி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த வெறி நாய்களை அப்புறப்படுத்தும் பணியை விராலி ஊராட்சி மன்ற நிர்வாகம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்
Next articleஇன்னும் ஒரு நாள்தான் இருக்கு:? பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு?