பாராளுமன்ற பணிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நரியை பிடியுங்கள் என பாராளுமன்ற ஊழியர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்தின் நான்கு மாடிக் கட்டடத்தில் நேற்று நரி ஒன்று திடீரென நுழைந்து விட்டது. பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்த நரி அதன்பின்னர் எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றது. இதனை சிசிடிவி வழியாக பார்த்த உயர் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களுக்கு அந்த நரியை பிடிக்குமாறு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து சில மணி நேரம் போக்கு காட்டிய நரியை ஊழியர்கள் பிடித்து வனத்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த நரி காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது
இது குறித்து கருத்து கூறிய ஆளுங்கட்சி எம்பி ஜூலியோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இதுவரை பிரிட்டன் பாராளுமன்றத்தில் எத்தனையோ விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இதுதான் மற்ற சம்பவங்களை விட முதலிடத்தில் உள்ளது என கூறினார். 24 மணிநேரமும் பாதுகாப்பு உள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தில் நரி ஒன்று திடீரென நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது