இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள நீண்டகால கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய வழிவகைகளை பிரான்ஸ் நாட்டு தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் கீழ்கண்டவாறு உள்ளது. அதன் முதல் அம்சமாக பிரான்சில் மாஸ்டர்ஸ் முடித்த இந்திய மாணவர்கள் அங்கேயே தங்கி இரண்டு வருடங்கள் வேலை செய்ய அந்த நாட்டு விசா அனுமதி அளிக்கும் .
இரண்டாவதாக அவ்வாறு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30000 ஆக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது .
உயர்கல்விக்காக பிரான்ஸ் நாட்டுக்கு வர விரும்பும் இந்திய மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரம் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த பாஸ்டல் டே நிகழ்வில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.