கிசான் திட்டத்தை தொடர்ந்து ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி !!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதை தொடர்ந்து, தற்பொழுது ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கூரை வீட்டில் இருந்த காங்கிரட் வீட்டுக்கு மாற்றப்பட்டதாக கோவிந்தன் என்பவருக்கு வந்த கடிதத்தை கண்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் ,2017-19 ஆம் ஆண்டு பிரதமரின் கான்கிரீட் வீடு திட்டம் செயலுக்கு வந்த நிலையில், 2016-ம் ஆண்டே கோவிந்தன் என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இல்லாத ஒருவர் எப்படி வீடு கட்டி இருக்க முடியும் என்பது அனைவரிடையே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இதனைதொடர்ந்து தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், சிவபாக்கியம் என்ற இறந்தவர்கள் பெயரில் வீடு கட்டியதாக கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து அவ்வூரில் உள்ள விசாரணை நடத்தியபோது, இருந்தவர்கள் பெயரில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதற்காக 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் மோசடி நடந்திருப்பது தெரிய வந்ததையடுத்து ,இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் கொடுத்தனர்.

மன்னார்குடி மாவட்டம் தலையாமங்கலம் மக்களுக்கு மட்டும் இந்த அதிர்ச்சியானது இல்லை, திருத்துறைப்பூண்டி தேவேந்திரபுரம் உள்ளிட்ட ஊர்களிலும் இதே போன்ற புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலைமையின் விபரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் இயக்குனரான கமல் கிஷோர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.