மதுரை மாவட்டம் கிசான் திட்டத்தில் மோசடி : மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு

0
150

மதுரை மாவட்டம் கிசான் திட்டத்தில் மோசடி : மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு

இந்திய விவசாயிகளை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கிசான் திட்டத்தை தொடங்கி , அத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது இந்த கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் பெற்று வரும் நிலையில்,அதிக அளவில் மோசடி நடப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி ,காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் , கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் கூறினார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் இத்திட்டத்தில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா ,அம்மா, மகன், மருமகள் என 4 பேர் நிதி உதவி பெறுவது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகமாக இருந்ததால் , போலியான பயனாளர்களை கண்டறியும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி வேளாண்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபொழுது 16 ஆயிரம் பேர் போலி கணக்கு மூலம் நிதி உதவி பெறுவது தெரியவந்தது.
இதில் 6 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் இருந்து சுமார் 70 லட்சத்திற்கு திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

 

 

Previous articleஇந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!
Next articleஇளைய தளபதியுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட பிரபல இயக்குனர்!