இந்திய விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டுவரும் பிரதமரின் கிசான் திட்டத்தில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பதாக தமிழக வேளாண் துறை செயலர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தில் சுமார் 110 கோடிக்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது .இந்த விவகாரம் தொடர்பாக 37 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் , மற்றும் 80 அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இந்திய விவசாயிகளுக்கு நேரடி நிவாரணம் அளிக்கும் வகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம் மத்திய அரசால் செயல்பட்டுவந்த பயனாளிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மூன்று முறை என தலா 6000 விகிதம் கணக்கில் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் முறைகேடு நடந்திருப்பது படிப்படியாக கண்டறிந்து வருகிறனர்.
இதனையடுத்து, வேளாண் துறையினர் தீவிர விசாரணை நடத்திய போது முறைகேடான நபர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சென்னை செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக வேளாண் துறை செயலாளர் நேற்று இதனை பற்றி விளக்கமளித்தார்.
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ,இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 39 லட்சம் தகுதியான பயனாளிகளுக்கு தலா 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது, என்றும் இத்திட்டத்தின் தகுதியான விவசாயிகள் பலர் விடுபட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது என்று கூறினார். இதனையடுத்து விவசாயிகளுக்கான இணையதளத்தில் புதிய வசதியை மத்திய அரசு ஏற்படுத்தும் என்றும், விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார் எண் ,வங்கி கணக்கு, நிலத்தின் விவரங்கள் ஆகியன பதிவு செய்யலாம் என்றும் கூறினார். மாவட்ட நிர்வாகம் ,வட்டார அலுவலகம் அதை இணையதளம் வாயிலாக ஒப்புதல் வேண்டும் என்று கூறினார்.
கடந்த 5 மாதமாக ஆட்சியர்கள் வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டதால் ஏப்ரல் ,மே ,ஜூன் ,ஜூலை மாதங்களில் வட்டார அளவில் விவசாயிகளின் பதிவுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக இணையதள முகவரியை கவுன்சில் அதிகாரிகளிடம் மட்டுமே இருந்தன.
அந்த உள்நுழைவு முகவரி மற்றும் கடவுச்சொல் தன் இடத்திலிருந்து தனியார் முகவரி செல்லும் வகையில் முகவரியை சிலர் வங்கிக்கோ ,திருடியோ பொதுமக்களிடமிருந்து விவரங்களை பெற்று பதிவு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.
அவ்வாறு பதிவு செய்ய ஒரு நம்பரில் இருந்து ரூபாய் 500 வரை பெற்றுள்ளனர். அதிக அளவில் கணினி மையத்தில் இந்த தவறு நடந்துள்ளது என்றும் கூறினார். ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், திருவண்ணாமலை ,கடலூர் ,சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 65 லட்சம் பயனாளர்களை புதியதாக பதிவு
செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மற்ற 25 மாவட்டங்களில் மொத்தமாகவே ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கின்றனர்.
இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆகஸ்ட் 2-ஆம் வாரத்தில் மாவட்டங்களுக்குள் 10 குழு விகிதம் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்படி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்தி ,முறைகேடாக சேர்ப்பவர்கள் பெயர் ஆய்வு ஆகியவற்றை கண்டறிந்தனர். இதுவரை 5 லட்சம் பேருக்கும் மேலான பயனாளர்கள் சந்தேகத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 18 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களிடம் இருந்து பணத்தை பெற வங்கிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை 32 கோடி திரும்பி பெற்றுள்ளதாகவும், இதை விட மூன்று மடங்கு அதாவது 110 கோடி வரை திரும்ப பெற வேண்டியுள்ளது என்றும் வேளாண் துறை அதிகாரி கூறியுள்ளார்-
மேலும் இத்திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பெயர் நீக்கப்படும் என்றும் உண்மையான விவசாயிகள் யாருக்கும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார் . தற்போதுள்ள பயனாளர்களின் இழந்தவர்கள் நிலத்தை விற்பனை செய்தவர்கள் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ,இனி மாவட்ட அளவில் கடவுச் சொல் உருவாக்கப்பட்டு, அது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் தகுதியானவர்களுக்கு அரசின் நிதியுதவி டிசம்பர் மாதம் அடுத்த தவணை செலுத்தப்படும் என்றும், சரியான பயனாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு வேளாண்துறை அதிகாரிகள் தீவிரமான செயலில் கண்டுபிடிக்கப்பட்ட போலியான பயனாளர்களை அகற்றுவதற்காக மத்திய அரசு தமிழக அரசை மிகவும் பாராட்டி உள்ளது.