பெண்களை போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!!

0
21
Free bus travel for men like women.. Minister said good news!!

TN Gov: தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் என்ற வகையில் புதுமைப்பெண் திட்டம் மேற்கொண்டு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவையும் உள்ளது. குறிப்பாக கட்டண மில்லா பேருந்து பயணம் மூலம் தமிழக முழுவதும் பெரும்பாலான மகளிர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் சட்டசபையில் இது ரீதியான கேள்வியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கருமாணிக்கம் கேட்டுள்ளார்.

அதில், விடியல் பயணம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், ஆண்களுக்கும் விடியல் பயணம் கொடுப்பீர்களா?? என்று கேட்டுள்ளார். இதற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, பெண்கள் தான் அதிகம் ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களை முன்னேற்றிக் கொண்டு வர வேண்டும்.

அந்தவகையில் பெரியார் காட்டிய வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரீதியான பல திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளது. நாளடைவில் நிதிநிலையானது சீராகும் போது கட்டாயம் நீங்கள் வைத்த கோரிக்கையானது கவனம் பெற்று பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் இம்முறை சட்டப்பேரவையில் குடும்ப தலைவர்களுக்கு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகையை விரிவாக்கம் செய்வதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மட்டும் பெண்கள் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

Previous article2 லட்சத்திற்கு மேல் நகையை அடகு வைத்துள்ளீர்களா.. வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Next articleசீமானுக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் இதுதான்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..