60 வயதை கடந்தவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்! இந்த நாள் முதல் டோக்கன் விநியோகம்!!
சென்னை மாநகர பேருந்துகளில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆறு மாதத்திற்கான டோக்கன் முறையானது டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த ஆறு மாதத்திற்கான டோக்கன் வழங்கும் முறை தொடங்கியுள்ளது.
60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது கல்விச்சான்று இதில் ஏதேனும் ஒன்றை கொடுத்து மாதத்திற்கு 10 டோக்கன் என்ற வீதம் ஆறு மாதத்திற்கு தேவையான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த டோக்கன்கள் சென்னை மாநகராட்சியில் 40 இடங்களில் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு இந்த டோக்கன்களை பயன்படுத்தி 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாகவே பயணம் செய்யலாம்.
டோக்கன் வழங்கும் இடத்தில் டோக்கன்கள் வழங்குவது மட்டுமின்றி மூத்த குடிமக்களின் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் அதனை புதுப்பித்தல் புதிய அடையாள அட்டை வழங்குதல் முதலிய சேவைகளும் உள்ளது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பும் இதே போலவே சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் டோக்கன் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு மூத்த குடிமக்கள் அதனை வாங்கி பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுதும் அதே போலவே அடுத்த ஆறு மாதத்திற்கு மூத்த குடிமக்களுக்கும் டோக்கன் வழங்கும் முறை செயல்படுத்த உள்ளனர். அந்த வகையில் வரும் 21ஆம் தேதி முதல் இந்த டோக்கன் வினியோகம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.