பட்டையகணக்காளர் ( CA ) தேர்விற்கான இலவச பயிற்சி!! மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

Photo of author

By Gayathri

எஸ் சி, எஸ் டி ஆன ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு CA படிப்பிற்கான தேர்வு பயிற்சி அரசால் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கும் படி சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.

பட்டயக்கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant – Intermediate) நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant – Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு மேற்கூறப்பட்ட தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்ப பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :-

✓ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராகளாகவும், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

✓ மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளனர். எனவே தகுதியுள்ள மாணவர்கள் இப்பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.