National

ஏழுமலையான் கோவிலில் இன்று மட்டும் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரிசனத்துக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிவில் இலவச தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதையடுத்து, இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று அலிபிரியில் இரவு முழுவதும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment