50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் !!

Photo of author

By Parthipan K

2020-ஆம் ஆண்டு சுமார் 50,000 இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படுமென தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸல் மக்கள், தன் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விவசாயம் மட்டும் எந்தவகையான பாதிப்பும் இல்லாமல் இருப்பதனால் ,சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டிலிருந்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க என தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக திட்டத்தில் பங்கேற்க வரும் 21ஆம் தேதி முதல் 30.10.2020 வரை விண்ணப்பத் தொகையை செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளது.