நாடு சுதந்திரமடைந்து 74 ஆண்டுகள் நிறைவு பெற்று 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆகவே எதிர்வரும் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைப்பார். அதன்பிறகு பற்பல கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதேபோல டெல்லியில் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு சுதந்திர தினம் உரையை வழங்குவார்.
இந்த சூழ்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. ஆகவே நாடு முழுவதும் இருக்கின்ற பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அதாவது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரையில் பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.