பட்டப் படிப்பிற்காக லோன் வாங்க போறீங்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான தகவல் தகவல் தான்!

0
93

உயர்கல்விக்கான கல்வி ஆண்டு தொடங்கியிருக்கின்ற நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய படிப்புக்கு கடன் பெறுவதற்கு திட்டமிடுவார்கள். ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், கடன் செலவின மதிப்பும் அதிகரித்திருக்கிறது.

அதோடு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்திருக்கிறது. ஆகவே கல்வி கடன் பெற்று வெளிநாட்டிற்குச் சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக அமைவதற்கான வாய்ப்புள்ளது.

மாணவர்கள் முதலில் தங்களுடைய கல்விக்கு ஆகும் மொத்த செலவு என்ன? என்பதை கணக்கிட வேண்டும். அதிலும் குறிப்பாக தாங்கள் தேர்வு செய்வது என்ன விதமான படிப்பு? விடுதி கட்டணம் எவ்வளவு? உணவு மற்றும் ஆய்வுக்கூட கட்டணம், போன்ற மற்ற செலவுகள் எவ்வளவு என்பதையும், கணக்கிட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதோடு தாங்கள் எந்த கல்வி நிறுவனத்தில் கல்வி பயில போகிறீர்கள்? கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், விவரம் திருப்பி செலுத்தும் திறன் மற்றும் மாணவரின் குடும்பத்தினுடைய ஒட்டுமொத்த வருமானம், உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்த பிறகு தான் உங்களுக்கான அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு என்பது முடிவு செய்யப்படும்.

மிகவும் பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அதிகப்படியான கடன் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு

வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை மாணவர்கள் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் வல்லரசு நாடுகளுக்கிணையான ரூபாயின் மதிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதையும், தாங்கள் கல்வி பயிலும் காலத்தில் இந்த சரிவு இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கொலேட்டரல் தேவைகள்

கல்வி கடன் வாங்குவதற்கு கொலேட்டரல் தேவைகள் என சொல்லப்படும் கடனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

4 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி கடனுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் தேவைப்படுவதில்லை. 4 லட்சத்திற்கும் அதிகமான கடனுக்கு பி.எல்.ஆர்,+1 சதவீதத்திற்கும் அதிகமாக பற்றி அதிகரிப்பு இருக்காது என சொல்லப்படுகிறது.

சில வங்கிகள் மாணவர்களுக்கு 7.5 லட்சம் வரையிலும் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்குகின்றன. அதே நேரம் 7.5 லட்சத்திற்கும் அதிகமான கடன் வாங்கும் போது அதன் கூட்டு வட்டி தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்தும் காலம் உள்ளிட்டவை குறைந்த வட்டி மதிப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதம் தேவைப்படலாம்.

டாலரில் கடன்

அயல்நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சில நங்கைகள் டாலர் மதிப்பில் கடன் வழங்குகின்றன. ரூபாய் கடன் அல்லது டாலர் கடன் என இரண்டில் எது சிறந்தது என்பதை மாணவர்கள் விரிவாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் டாலர் கடன் என்பது அனைத்து விதமான படிப்புகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கும் கிடைத்து விடாது எனவும், சொல்லப்படுகிறது.