ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச விமான டிக்கெட்!! அதிரடியான அறிவிப்பு எங்கு தெரியுமா!!
வெளிநாடுகளில் இருந்து தேர்தலில் ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஓட்டு போடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்களிக்க வரும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விமான டிக்கெட் புக் செய்து தரப்படும் என்று கர்நாடக மாநிலத்தில் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதியில் முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு வரும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா தொகுதியில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
உத்தரகன்னடா தொகுதியில் அதிகமாக இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர். அந்த தொகுதியில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்கள் பணிக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வாக்களிக்க வரும் இஸ்லாமியர்களுக்கு இலவச விமான டிக்கெட் புக் செய்து தரப்படும் என்று சவுதி அரேபியாவில் உள்ள பட்கல் இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.
உத்தரகன்னடா மக்களவை தொகுதியில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஓட்டுப் போட ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விமான டிக்கெட் புக் செய்து தருவதாக பட்கல் இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த இலவச அறிவிப்பு எதனால் என்று வாக்காளர்களை சிந்திக்க தூண்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதாவது சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டும் என்றால் விமான டிக்கெட்டின் விலை 25000 ரூபாயில் இருந்து 30000 ரூபாய் வரை செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்கல் இஸ்லாமிய அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.