அம்மா உணவகத்தில் இலவச உணவு! ஏழை எளிய மக்கம் மகிழ்ச்சி!!

0
164

ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

 

அதில் கடந்த ஒருவாரமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதிமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த செலவில் மூன்று வேளையும் உணவுகளை அளித்து வந்தது.

 

இப்பொழுது முதலமைச்சராக பணி அமர்ந்திருக்கும் திரு ஸ்டாலின் அவர்கள் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்படும் என்றும் அறிவித்தார்.

 

மேலும் கோவை மாநகராட்சி மாவட்ட ஆட்சியர் நாகராஜன் சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள், கொரோனா காலத்தில் இலவசமாக அம்மா உணவகங்களில் உணவு வழங்கும் திட்டத்தை பற்றி மாநகராட்சி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

அந்த உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அந்த செலவுத்தொகையையும் திமுகவை சேர்ந்த சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் பொறுப்பேற்பதாக கூறியுள்ளனர்.

 

மேலும் திமுகவினர் ஊரடங்கு காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளனர். இதற்காக நிதியையும் திரட்டி வந்தனர்.

 

கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மொத்த எண்ணிக்கை 15. பொள்ளாச்சி வால்பாறை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 15 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

ஊரடங்கு காரணமாக இலவச உணவு அம்மா உணவகங்களில் வழங்கப்படும் என மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு திமுக சார்பில் 52.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

 

இன்று முதல் 15 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

Previous articleஅதிமுகவில் விரைவில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்! யார் தெரியுமா?
Next article“மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா” பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??