குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!

Photo of author

By Sakthi

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!

Sakthi

Updated on:

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் எடுக்கப்படும் இலவச LKG வகுப்புகளுக்கு குழந்தைகளை சேர்த்துவதற்கு இதுவரை 100000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி LKG வகுப்பில் சேர இயலாத குழந்தைகளுக்கு என்று கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இந்த இலவச LKG வகுப்புகளுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் இலவச LKG வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது வரை 100000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச LKG வகுப்புகளுக்காக 25 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இலவச LKG வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து இன்று வரை 111000 விண்ணபங்கள் இந்த இலவச LKG வகுப்புகளில் சேர்வதற்கு வந்துள்ளது. இந்த இலவச LKG வகுப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் மே 24ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.