ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை

0
189
TN Assembly-News4 Tamil Online Tamil News1
TN Assembly-News4 Tamil Online Tamil News1

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கூடுதலாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி இன்று திமுக சார்பாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

மின்கட்டணம், மின்கணக்கீடு குறித்து அமைச்சர் தங்கமணி ஏற்கனவே அதற்காக முறையான விளக்கம் கொடுத்து விட்டார். இதனையடுத்து தற்போது திமுக நடத்தும் இந்த போராட்டம் தேவையற்றது. மக்கள் இடையே ஒரு வித பீதியை ஏற்படுத்துவதற்காக தான் திமுக இது போன்று போராட்டத்தை நடத்துகிறது.

Minister Udayakunmar
Minister Udayakunmar

தமிழகத்தில் முதல்வரின் போர்க்கால நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும் நாட்டிலேயே அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தான் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படும் முகக் கவசம் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleநாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!
Next articleபொருளாதார வீழ்ச்சியிலும் 9 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த நிறுவனம்