ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் – அரசானை வெளியீடு

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நியாய விலை கடைகளில் இலவச முகக் கவசம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 நியாய விலை குடும்பை அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட இரண்டு முகக்கவசம் அளிக்கப்படவுள்ளது.

இதற்காக 6,74,15899 பேருக்கு 13,48,31798 முகக்கவசம் கொள்முதல் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.