அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!
பொது மருத்துவம் பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில் சேர, நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது.இது இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறத.அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வை பற்றி தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்,தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி பெரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே தமிழக அரசு பயிற்சி நடத்துவது போதுமானதா என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐஐடி நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு, அரசு ஊதியம் பெரும் பள்ளி மாணவர்களுக்கு நிகழாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தம் 412 மையங்களில் நவம்பர் மூன்றாம் வாரம் முதல் வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் கற்றல் மொழிக்கேற்ப தேர்வு செய்து கொள்ளவேண்டும்.போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சமாக 50 மாணவர்கள் என்றவகையில் தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பின் அடிப்படையில் ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சமாக 20 மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.பயிற்சி மைய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.