இலவச பொங்கல் சலுகைகள் ரத்து?? ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
எம்ஜிஆர் கால கட்டத்தில் இருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்குவர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தவரையிலும் இத்திட்டம் தொடரப்பட்டது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியின் நடைபெற்று வருவதால் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த இலவச வேட்டி சேலை திட்டத்தையும் திமுக முடக்குவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர் கூறுகையில், வருடம் தோறும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் இலவச வேட்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்த இலவசங்கள் வழங்குவதன் மூலம் நெசவாளர்கள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு மக்களுக்கு இலவச வேஷ்டி ,சேலை வழங்குவதை நிறுத்திவிட்டது. மூன்று துறைகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மக்களுக்கு இந்த சலுகைகள் கிடைத்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுகையில், ஒரு கோடியே 24 லட்சம் வேஷ்டிகளும், 99 லட்சம் சேலைகளையும் கொள்முதல் செய்வதாக கைத்தறி அமைச்சர் கூறினார். இவ்வாறு கொள்முதல் செய்வதற்கு போலியான குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டது முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகையில் கூறிய போது, கடந்த ஆண்டு 5000 முதல் 10 ஆயிரம் வரை இருப்பு காணப்படும். அவ்வாறு இருக்கையில் எப்படி லட்சக்கணக்கில் வேறுபாடு காட்டப்படும் என்று கேள்வி எழுப்பிஉள்ளனர். அப்படியே வேறுபாடு இருந்தாலும் வேஷ்டி மற்றும் சேலைகள் இவ்வளவு வித்தியாசம் காணப்படுமா என்று கேட்டுள்ளனர். தற்பொழுது வரை இந்த வேஷ்டி சேலைகளுக்கான காண நிலுவைத் தொகையில் பாக்கி உள்ளது. அவ்வாறு இருக்கையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எப்படி ஒரு கோடி அளவில் உற்பத்தி செய்ய முடிந்திருக்கும்?
இது மக்களை ஏமாற்றக்கூடிய செயலாக உள்ளது? அப்படியே உற்பத்தி செய்திருந்தாலும் நிலுவை தொகை இருக்கையில் மீண்டும் அவர்கள் உற்பத்தி செய்ய நேர்ந்தால் அது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இவ்வாறு மக்களிடம் கூறி அதிமுகவில் இருந்த திட்டங்களை முற்றிலும் மூடநினைப்பதை திமுகவின் முக்கிய குறிக்கோள் என்று தெரிவித்தார்.