இரு மாதங்களுக்கு ப்ரீ ரேஷன்! ஆட்டோ,டாக்ஸி ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000! அரசின் அதிரடி சலுகை!

Photo of author

By Rupa

இரு மாதங்களுக்கு ப்ரீ ரேஷன்! ஆட்டோ,டாக்ஸி ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000! அரசின் அதிரடி சலுகை!

சென்ற ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்கு பிறகு சிறிதளவு குறைந்த நிலையில் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அதனை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளையும் மாநில மற்றும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

குறிப்பாக டெல்லியில் அதிக அளவு தொற்று காணப்படுவதால் தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து மகாராஷ்டிராவிலும் தொற்று அதிகமுள்ளதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து குஜராத்,பீகார் போன்றவற்றில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.நேற்று ஆந்திரா முதல்வர் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.அதேபோல தமிழ்நாட்டிலும் அதிக அளவு தொற்று பரவி வருவதால் நாளை நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளித்துள்ளனர்.

அதன்பின் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர்.உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட தடை விதித்து பார்சல் வசதி பயன்படுத்துமாறு கூறியுள்ளனர்.இவ்வாறு பல விதிமுறைகளை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.அதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக கொரோனா தடுப்பூசி செலுத்துதல்,சமூக இடைவெளிகளை கடைபிடித்தல் என பலவற்றை மத்திய அரசும்,மாநில அரசும் கூறி வருகிறது.அதுமட்டுமின்றி மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை விமானங்கள் மூலமாகவும் இரயில்கள் மூலமாகவும் விநியோகித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு டெல்லியில் காணப்படுவதால் அங்கு முழு ஊரடங்கு நிறுவியுள்ளது.இதில் பாமர மக்களின் நலனை கருதி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியதாவது,டெல்லியில் மொத்தம் 72 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி ஆட்டோ ஓட்டுனர்,டாக்ஸி மற்றும் ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம் என கூறியதால் மக்கள் 2 மாதங்கள் லாக்டௌன் என அச்சம் கொள்ள வேண்டாம் என அரவிந்த் கெஜிரவால் கூறியுள்ளார்.