இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

Photo of author

By Amutha

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

Amutha

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர். 

டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து நெருக்கியதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி நிறைய பெண்கள் மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்த பெண்களில் நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் காயத்தால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் இடத்தை பார்வையிட்டு நிறுவனத்திடமும் விசாரணை செய்தனர். இதுக் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களிடமும் விசாரணை செய்யப்பட்டது.

இலவச புடவைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.