மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

0
369
Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!
Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து சாதாரண கட்டணம் வசூல் செய்யும் நகரப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேருக்கு அடையாள அட்டையை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் ஒரு சில நடத்துனர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தும் மாற்றுத்திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார் வருகின்றது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும்  அவருடன் வரும் உதவியாளர் ஆகியோர் தேசிய மற்றும் மாநில மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது புத்தகத்தை காண்பித்தால்  அவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டை நடத்தினார்கள் வழங்க வேண்டும் என மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவினை பின்பற்றாத நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து கிளை மேலாளர்கள், உதவிகளை மேலாளர்கள், மண்டல அலுவலர்கள் தங்கள் கிளைக்குட்பட்ட நடத்துனர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
Next articleஇனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ!