Tamil Nadu Government: நம் தமிழக அரசு பெண்களின் நலத்தை கருத்தில் கொண்டு மகளிர் இலவச பேருந்து அறிமுகப்படுத்தியது. இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிலையில் தற்போது டீலக்ஸ் பேருந்துகளை இலவசப் பேருந்து சேவைக்கு பயன்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
மகளிர் இலவச பேருந்து அறிமுகமான நிலையில் இருந்தது தற்போது வரை பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் பெண்கள், இலவசப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க்(PINK) நிறம் பூசப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சேவை அரசு நகர பேருந்துகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள BSVI பேருந்துகளை இலவச பயணத்திற்கு பயன்படுத்தும் திட்டம் உள்ளது. ஆனால் இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர சில காலம் எடுக்கும் என்பதால் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலையில் நெருக்கடியை சமாளிக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிக கட்டணத்துடன் இயங்கும் சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் சிலவற்றை இலவச பயணத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக மாநகரின் 30 பணிமனைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வரும் 700 சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதனால் பெண்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலவச பேருந்துகளில் ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.