இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

Photo of author

By Rupa

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

Rupa

Free wedding hall for them in Tamil Nadu now! Chief's super plan implemented!

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

இம்முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வாகை சூடியது. மதுரை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலில் பதவியேற்றதும் 5 அம்ச திட்டங்களை கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கே உரித்தான கட்டணமில்லா பேருந்து திட்டம் பெரும் உதவியாக உள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளிலேயே 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அந்தவகையில் இன்று தலைமைச் செயலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் இனி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அது சம்பந்தமாக சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் திருமணம் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளியான மணமகன் மற்றும் மணமகள் திருக்கோவிலில் திருமணம் செய்திட கட்டணமில்லா உத்தரவினை கொடுத்தார். அந்தவகையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், அவர்களில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் பட்சத்தில் திருக்கோயில்களில் அவர்களுக்கு திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்க படாது அதேபோல அது கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றாலும் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இத்திட்டத்தால் மாற்றுத்திறனாளிகள் பெருமளவு மகிழ்ச்சி அடைந்தனர்.இனி வரும் காலங்களில் மணமக்களில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு கோவில்களில் உள்ள மண்டபங்களுக்கு கட்டணம் வசூலிக்கபடாது.இதனால் அதிகப்படியான மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.