சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து!! 20 பயணிகள் ரெயில் சேவை ரத்து!!

Photo of author

By Vinoth

ரெயில்வே துறையின் மெத்தனத்தால் தொடரும் ரெயில் விபத்துகள். நேற்று இரவு சரியாக 11 மணி அளவில் இந்த ரெயில் விபத்து தெலுங்கான மாநிலத்தில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாதுக்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் ராகவபுரத்திற்கும் ராமகுண்டம் இடையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மேலும் இந்த ரெயில் விபத்து காரணமாக 20 பயணிகள் ரெயில் ரத்து செய்தது தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.  மேலும் இந்த வழித்தடத்தில் இயக்கம் 10 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. மேலும் மதுரை – நிஜாமுதின் ரெயில் பெத்தபள்ளி – நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியில் மாற்றி விடப்பட்டது. சென்னை சென்ட்ரல் – அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியில் மாற்றி விடப்பட்டது.

மேலும் அகோலா மற்றும் அகோட்டில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது. மேலும் சில ரெயில்களின் நேரம் மாற்றியமைத்து தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம். இந்த ரெயில் தடம் புரண்டதால் தெலுங்கானவிற்கு வரும் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கபடுகிறது. மேலும் கூடுதல் தகவல்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.