இரவில் நடந்த கொடூரம்! கணவன் செய்த வெறிச்செயல் மனைவி உயிரிழப்பு!

0
152

செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியைச் சார்ந்தவர் ஏற்பாடு லாரன்ஸ் சரோவர்ஷா தம்பதியர்கள் ஆனால் தற்சமயம் மாதவரம் பால்பண்ணை அருகே இருக்கின்ற எம்எம்டிஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டு இருக்கிறது அதில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மனைவியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தில் மிகுந்த காயமடைந்த சரோவர்ஷா உயிருக்கு போராடி இருக்கிறார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அது பலன் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே சரோவர்ஷா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் லாரன்ஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleபரபரப்பான தேர்தல் களம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!
Next articleகிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!