தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

Photo of author

By Savitha

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

தமிழகத்தில் தொடரும் மழையால் அடிக்கடி மின்வெட்டு  ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

சமீப நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் இந்த கனமழையால் பல்வேறு மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில பாதிப்புகளையும் இந்த மழை   ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மின்வெட்டு. தொடர் மழை காரணமாக அவ்வப்போது மின்தடை பல்வேறு பகுதிகளில் ஏற்படுகிறது. 10 நிமிடங்கள் முதல் ஒரு சில மணி நேரங்கள் வரை மட்டும் இந்த மின் தடை ஏற்பட்டாலும், மக்களுக்கு இது சிரமத்தையே தருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில்  ஏற்படும் மின்தடையால், கைக்குழந்தை வைத்திருக்கும்  பெற்றோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோடை காலம் என்பதால் வெப்ப நிலையும் அதிகரித்துள்ளது. ஏசி, மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில், ஏற்படும் மின்தடையால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த கனமழை, தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எனவே கனமழையின் போது ஏற்படும் மின்தடை குறித்து மக்கள் விழிப்புணர்வு உடன்  இருக்க வேண்டும் என்றும், தொடர்  மின்தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலக ஊழியர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மின்வாரியம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.