தார் மலைப்பகுதியில் தாறுமாறாக பொழிந்து வரும் பனி!

Photo of author

By Parthipan K

வருடத்தில் பிப்ரவரி மாதத்தின் கடைசியில் தொடங்கி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெப்பமாக இருக்கக்கூடும். ஆனால் சவுதி அரேபியாவில் இப்பொழுது சில இடங்களில் பனி பெய்து வருகிறது. இதுபோலவே அமெரிக்காவிலும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது.

சவுதி அரேபியாவில் உள்ள தார் மலைப்பகுதியில் “வெள்ளை மழை” போன்று பனி பெய்து வருகிறது. இதனைப் பார்த்த மக்கள் அனைவரும் இதை ரசித்து வருகிறார்கள். இதனால் தார் மலைப்பகுதிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் இச்சூழல் சுற்றுலா வருபவர்களை அதிகமாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

குளிரும், பனியும் அதிகமாக உள்ளதால், மக்கள் அதிகம் வெளியே வரவேண்டாம் என்று அந்நாட்டு வானிலை மையம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவரவர் இடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

“பாலைவனக் கப்பல்” என்றழைக்கப்படும் “ஒட்டகம்” கடும் குளிரிலும், பனியிலும் வெளிப்புறத்திலேயே இருக்க நேர்ந்துள்ளது. மக்களை சுமந்து சுற்றிவரும் ஒட்டகத்திற்கு பொழியும் பனியில் வெளியே வாழும் சோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டகங்கள் அனைத்தும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.