இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்!

Photo of author

By Hasini

இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்!

பெண் காவலருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள். யாராக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூடா நட்பு கேடாய் விளையும். இந்த விசயத்தில் கூட அப்படித்தான் நடந்துள்ளது.

மும்பையில் இப்படி ஒரு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைத்தளம் மூலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் அறிமுகமாகி உள்ளார்.

தொடர்ந்து பேசி வந்த அவர்கள் நண்பர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து நாளடைவில் பழக்கம் அதிகமானதால் நேரில் சந்தித்து திருமணம் செய்வதாக போவாய் பகுதியில் வைத்து உறுதி அளித்துள்ளார்.

அதன் காரணமாக அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். மேலும் அவ்வாறு சந்திக்கும் போது அந்த நபர் அவற்றை எல்லாம் ரகசியமாக புகைப்படமும், வீடியோவும் எடுத்து வைத்து உள்ளார்.

அதன்பின் அந்த ஆதாரங்களை வைத்து அவரை மிரட்டி உள்ளார். மேலும் அந்த நபரது நண்பர்கள் இருவரும் ஆக மொத்தம் மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

எனவே, கடந்த 11 ம் தேதி பெண் காவலர், மும்பையில் உள்ள மேக்வாடி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கு zero எப்.ஐ.ஆர் பதிவு செய்து பூவாய் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அந்த மூன்று நபர்களை தேடி வருகின்றனர்.

காவலர் என்றாலும் பெண்தான் என அந்த நபர்கள் சாதரணமாக நினைத்ததன் காரணமே இந்த தவறு ஏற்பட காரணம். சமூகத்தில் இந்த மாதிரி தவறுகள் குறைய அரசு  கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

காவலருக்கே இந்த நிலைமை என்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.