சென்னை முதல் தமிழக வெற்றி கழக மாநாடு வரை!! சைக்கிளில் சென்ற மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை!!

Photo of author

By Gayathri

இன்று விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாட்டில் 5 லட்சம் மக்களுக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பதனை அறியவே மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகை சார்ந்தவர்களும் விஜய் உடைய தவெக மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜயின் இந்த மாநாடு குறித்து முடிவு எடுக்கும் பொழுதிலிருந்து இவருடன் இருந்த தாடி பாலாஜி மற்றும் சௌந்தரராஜா ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போகின்றனர் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் இருந்து சௌந்தரராஜா சைக்கிள் மூலம் விஜயின் மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இவருடன் சைக்கிள் பயணம் மேற்கொள்ள “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற அறக்கட்டளையின் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

மேலும் இவர் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் உள்ளிட்ட பல படங்களில் சௌந்தரராஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தின் மூலம் நடிகர் விஜய் உடன் இணைந்த சௌந்தரராஜா விஜய் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்த பொழுது அவரோடு ஆதரவாக நின்றுள்ளார். கட்சிக்கு பெயரிடப்பட்டது மற்றும் கட்சி கொடி அறிமுகப்படுத்திய பொழுதெல்லாம் இக்கட்சிக்கு என மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜைகளும் மேற்கொண்டுள்ளார்.

தற்பொழுது விஜயின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் தொலைக்காட்சிகளில் இது தொடர்பான விவாதங்கள் சென்று கொண்டுள்ளன. இந்த விவாதங்களில் பங்கேற்ற இவர் விஜய் – க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில கட்சி மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த விசாலையில் மிக பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சௌந்தரராஜாவும் அவரது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை உறுப்பினர்களும், சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு சைக்கிளில் பேரணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள்.