மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

Photo of author

By Divya

மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

Divya

சரும நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் நலுங்கு பொடி.இதை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)பச்சை பயறு
2)கார்போக அரிசி
3)வெட்டி வேர்
4)விளாமிச்சி வேர்
5)சந்தனம்
6)கோரைக்கிழங்கு
7)கிச்சிலி கிழங்கு
8)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:-

1.பச்சை பயறு 500 கிராம் அளவு எடுத்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

2.அடுத்து 250 கிராம் கார்போக அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.இவை இரண்டையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.

3.பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை பயறு,கார்போக அரிசியை போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கைப்பிடி வெட்டிவேர்,ஒரு கைப்பிடி விளாமிச்சி வேரை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.

4.அடுத்து ஒரு துண்டு சந்தனக் கட்டை,ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு,சிறிதளவு கோரைக்கிழங்கு மற்றும் கிச்சிலி கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

5.இந்த நலுங்கு பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் இந்த நலுங்கு பொடி 20 கிராம் அளவிற்கு போட்டு பன்னீர் வாட்டர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.

6.இந்த பேஸ்டை மங்கு,வெண்புள்ளி,கரும்புள்ளி,தேமல்,தழும்பு உள்ளிட்ட அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு
2)மஞ்சள் கிழங்கு
3)ரோஜா இதழ்
4)வெட்டி வேர்
5)குப்பைமேனி இலை
6)வேப்பிலை

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அரை கிலோ பச்சை பயறை லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

2.அதன் பிறகு ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு,கால் கப் உலர்ந்த ரோஜா இதழ்,20 கிராம் வெட்டி வேர்,ஒரு கைப்பிடி காய்ந்த குப்பைமேனி இலை,ஒரு கைப்பிடி வேப்பிலை ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

3.இந்த பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீர் விட்டு கலந்து உடலில் தேய்த்து குளித்தால் அனைத்துவித சரும நோய்களும் அகலும்.