இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

அரசு பள்ளிகளில் வேலை செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடிவரும் நிலையில் அதேபோல அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தர கோரியும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இவ்வாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 யில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

இது இவர்களுக்கு வழங்கும் புத்தாண்டு பரிசு என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயல்பாடானது ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனை அடுத்து சென்ற ஆட்சியில் பெரும் சலுகைகளால் நிதி சுமை இருக்கும் பட்சத்திலும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் கடன் சுமை ஏற்பட்டாலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ள அகவிலைப் படியை தற்பொழுது உயர்த்தி வழங்கியுள்ளோம்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பெரும்பாலானோர் பயன் அடைவர்.

இத்தோட அடுத்த மகிழ்ச்சி செய்தியாக சம வேலை சம ஊதியம் என்று கோரிக்கையை அரசு ஊழியர்கள் வைத்து வரும் வேலையில் அது தற்பொழுது பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதற்கென்று குழு அமைத்துள்ள நிலையில் நாளடைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.