இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By CineDesk

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு, அதற்கான குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பு வழங்கவில்லை எனில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என இரண்டு அமைப்புகள் உள்ளன.

இதில் புதிதாக மின் இணைப்பு பெற வேண்டுமெனில், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள நடைமுறையின் படி புதிய மின் இணைப்பு பெற 30 நாட்கள் வரை ஆகிறது. இதில் சில திருத்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கொண்டு வந்துள்ளது.

புதிதாக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அடுத்து 3 நாட்களில் புதிய மின் இணைப்பை தர வேண்டும் என அறிவித்துள்ளது.மேலும் மேம்பாட்டு பணிகளுக்கு 60 நாட்கள் வரையும், புதிய ட்ரான்ஸ்பார்மர்களுக்கான பணிகளுக்கு 90  நாட்கள் வரை ஆகும் என தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிட்ட நாட்களுக்குள் மின் இணைப்பு தராமல் இருப்பது, தற்காலிக இணைப்பு தராமல் இருப்பது, சர்வீஸ் கனெக்சன் மாற்றம் செய்யாமல் இருப்பது, மின் கட்டணத்தில் சிக்கல் போன்ற விசயங்களில் இழப்பீடு பெற்று கொள்ளலாம்.கிரிட் இன்டராக்டிவ் சோலார் சிஸ்டம் (GISS) பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ரூ.500 முதல் ரூ.1000 வரை இழப்பீடு பெறலாம்.

  • வாடிக்கையாளர்களின் குறைகளை, சரியான முறையில் பார்க்காமல் இருப்பதற்கு  50 ரூபாய் இழப்பீடு பெறலாம்.
  • வாடிக்கையாளர்களின், புகார்களுக்கு பதில் வரவில்லையெனில் ரூ.25 முதல் ரூ.250 வரை இழப்பீடு பெற முடியும்.
  • மின்சார மீட்டர் மாற்றுவதில் தாமதமானால் ரூ.100 முதல் ரூ. 1000 வரை இழப்பீடு பெறலாம்.
  • மின்சார கட்டணத்திற்கான பதில்களில் கால தாமதம் ஏற்படும்போது ரூ.150 இழப்பீடு பெற முடியும்.

இந்த புதிய வழிமுறைகளின் படி தற்காலிக மின் விநியோகம் 48 மணி நேரத்திற்குள் கொடுக்கப் பட வேண்டும். பழுதடைந்த மின் மீட்டர்கள் 7 நாட்களுக்குள் சரி செய்ய பட வேண்டும்.  தடையில்லா மின்சாராம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகும்.

6 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லை என்றால், அதற்கு பிறகு வரும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ரூ.50  இழப்பீடு  பெறலாம்.