இனிமேல் மொபைல் நம்பர் கேட்டால் பிறந்த தேதியை சொல்லுங்க!! மொபைல் போன் பயனாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு சேவையை நடத்தி வருகிறது. முதலில் இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்கும் உரிமம் பெற்றிருந்தது. அதனையடுத்து கடந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கியது. மேலும் இந்த நிறுவனம் அடிக்கடி பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல திட்டங்களை செய்து வருகிறது. அதனையடுத்து பயனர்களின் நலனுக்கு புதிய மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பயனர்கள் தங்கள் விருப்பம் போல் மொபைல் எண்ணை தேர்ந்தெடுத்து கொள்ளும் சிறந்த திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த திட்டம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல் மொபைல் எண்ணின் கடைசி 4 முதல் 6 இலக்குகளை மாற்றிக்கொள்ளலாம். இதனை எளிதில் மாற்றிக்கொள்ள இணையதள முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனையடுத்து htttps://www.jio.com/selfcare/choice-number/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மை ஜியோ மொபைல் செயலி மூலம் பயனர்கள் நேரடியாக மாற்றிக்கொள்ளலாம்.
இதில் மொபைல் நம்பர் தேர்வு பகுதிக்கு சென்று தற்போது நீங்கள் வைத்துள்ள மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும் . அதன் பின் ஓடிபி வரும் அதன் மூலம் உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து உங்களுக்கு விருப்பமான எண்ணை மாற்றுவதற்கு விருப்பம் வழங்க வேண்டும்.
அதன் பின் பணம் செலுத்தும் ஆப்ஷனுக்கு சென்று 499 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின் 24 மணி நேரத்திற்கு பிறகு புதிய மொபை நபவ்ர் செயல்பட ஆரம்பிக்க தொடங்கும். இந்த புதிய அறிமுகம் ஜியோ பயனர்கள் இடையே நாள் வரவேற்பு பெற்றுள்ளது.