இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு! 

0
175
#image_title

இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு! 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினி மையமாகப்பட  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதலாக வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில் ஒன்று இருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினி மயமாக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு நிறுவனத்திற்கு 294 கோடி ரூபாய் நிதி  கணினி மயமாக்குவதற்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மதுபானம் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும். வாங்கும் அனைத்தும் நிறைவாக பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது.

அனைத்து சேவைகளும் கணினி மையமாக்கப்பட்டுள்ளதால் இனிமேல் டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கினால் பில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மது பிரியர்களிடம் ஏற்படும்.

 

 

Previous articleரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!
Next articleசாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !!