Breaking News

இனி இதை செய்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைக்கும் – மின்சார வாரியம் அதிரடி!!

From now on only if you do this you will get electricity connection - Electricity Board Action!!

இனி இதை செய்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைக்கும் – மின்சார வாரியம் அதிரடி!!

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் ஏற்கனவே மின் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தற்பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் லேப்டாப்க்கு ஜார்ஜ் போடும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.

அது மட்டுமின்றி ஹீட்டர்,மொபைல் சார்ஜ்,அயர்ன் பாக்ஸ் போன்ற மின்னனு சாதனங்களை பயன்படுத்தும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இவ்வாறு ஏற்படும் விபத்துகளை தடுக்க ‘ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்'(ஆர்.சி.டி.) என்ற உயர் காக்கும் சாதனம் உதவும்.

மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டால் அதை எச்சரிக்கும் விதமாக பீஸ் போக வைக்கும் வேலையை ‘ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்'(ஆர்.சி.டி.) சாதனம் செய்கிறது.இந்த மின் சாதனத்தை மின் இணைப்பு பெற்ற அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் தற்பொழுது புதிதாக வீடு கட்டி வருபவர்கள் தாங்கள் பெறும் மின் இணைப்பில் ‘ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்'(ஆர்.சி.டி.) சாதனத்தை பொருத்த வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்’ பொருத்த ரூ.4000 வரை செலவாகும் என்று தெரிவித்துள்ள மின்சார வாரியம் புதிதாக மின் இணைப்பு பெற உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே மின் இணைப்பு பெற்றவர்கள் கட்டாயம் உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

Water Wastage Fine: குடிக்கும் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் – அரசின் அதிரடி அறிவிப்பு!!

BODY PAIN: உடம்பில் உள்ள வலியை உடனே விரட்டும் எனர்ஜி மில்க்!! ஒரு டைம் குடித்தாலே போதும்!