இனி மாதந்தோறும் இந்த தேதிகளில் பள்ளிகள் விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
316
From now on, schools will be closed on these dates every month.
From now on, schools will be closed on these dates every month.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இம்முறை வெயில் சுட்டெரித்தது. இதன் தாக்கம் பள்ளி திறப்பு வரையும் இருந்தது. இதனால் பள்ளி திறப்பு தேதியானது ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனை ஈடுகட்டும் வகையில் 20 சனிக்கிழமை பள்ளிகள்  செயல்படும் என கூறியிருந்தனர்.

இதனிடையே அரசு பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு எப்படி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறதோ அதேபோல ஆசிரியர்களுக்கும் விடை முறை அளிக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து முடிவெடுக்க தாமதமாகும் பட்சத்தில் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதற்கு ஒப்புதல் அளித்து பள்ளி கல்வித்துறையானது, இனி மாதந்தோறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கபப்டும் என கூறியுள்ளது. அதனால் பள்ளி வேலை நாளாக இருந்த உத்தரவானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் மாதம்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்று கூறியுள்ளனர்.

Previous articleFLASH: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
Next articleThyroid Problem? இதை குடித்த அடுத்த 7 தினங்களில் தைராய்டு பிரச்சனை நீங்கி விடும்!!