இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

Photo of author

By Amutha

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

Amutha

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை இனிமேல் தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மொழி உள்பட 13 மொழிகளில் இனிமேல் இந்த தேர்வுகளை பயனாளர்கள் எழுதலாம்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.   மத்திய அரசின் பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வானது இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பிற மொழிகளை பேசும் தேர்வர்கள் தேர்ச்சி பெற இயலாத சூழ்நிலை உருவாகிறது.

இதை தடுக்கும் பொருட்டு அனைத்து மொழி பேசும் தேர்வர்களும் பயன்பெறும் வண்ணம் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் எழுதப்பட்டு வந்த தேர்வு இனி தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் பணிகளில் சேர்வதற்கு அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க பெறவேண்டும் என்றும்  மொழிதடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது எனபதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் இருந்து வரும் இளைஞர்கள், தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதி பலனடைய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு  கொடுத்துள்ள விளக்கம் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மத்திய ஆயுத படை தேர்வான, சிஏபிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எஸ்எஸ்சி தேர்வு தேர்வுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இனி தேர்வு குறித்த அறிவிப்பு வரும் காலங்களில் இந்த முறையானது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.