இனிமேல் பில் இல்லாமல் மது பாட்டில் வாங்க முடியாது!! வருகிறது டாஸ்மாக் புதிய திட்டம்!!

Photo of author

By Vinoth

இனிமேல் பில் இல்லாமல் மது பாட்டில் வாங்க முடியாது!! வருகிறது டாஸ்மாக் புதிய திட்டம்!!

Vinoth

From now on you can't buy a bottle of wine without a bill!! Tasmac new plan is coming!!

இந்த புதிய திட்டத்தை சென்னையில் அடுத்த 2 வாரத்திற்குள் செய்யல்படுதப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை விலையை விட 10 ரூபாய் அதிகமாக வங்கபடுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கணினியில் இன்றைய தொடக்க இருப்பு மற்றும் விற்பனை விபரம், மீதம் இருக்கும் இருப்பு என அனைத்தும் கணினியில் சாப்ட்வேர் அமைத்து டிஜிட்டல் முறையை கொண்டு வருகிறது.

மேலும் இந்த கணினி அடிப்படையில் அரக்கோணம், ராமநாதபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் 14  டாஸ்மாக் கடைகளில் முதல் கட்டமாக கையாடல் கருவி மூலம் ‘பில்’ செய்யப்பட்டது. அது தற்போது வெற்றிக்கரமாக சோதனை செய்யப்பட்டது. மேலும் அதில் சில குறைகள் இருந்தன அதனையும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் சரி செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றியை அடுத்து அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டகளில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளுக்கு பில் வழங்கும் கருவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும் இன்னும் 2 வாரங்களில் சென்னை முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளுக்கும் கணினி மயமாக்கப்பட்டு அதில் தானியங்கி மூலம் மது விற்பனை மற்றும் கையாடல் கருவி மூலம் பில் வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டு வருகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.