பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!

Photo of author

By Savitha

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!

பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு இரயில் புறப்படவுள்ளது.

பொள்ளாச்சி இரயில் நிலையத்தில் இருந்து கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், மதுரை, விழுப்புரம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ரயில் இயக்கப்படுகின்றது. சமீபத்தில் பொள்ளாச்சியில் இருந்து இராமேஸ்வரத்திற்கும் இரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு இரயில் இயக்கப்படவுள்ளது.

கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று வருவதற்கென சிறப்பு இரயில் பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படுகிறது. பாரத் கௌரவ் என்ற பெயர் கொண்ட இந்த இரயில் மதுரை வழியாக கோவாவிற்கு சுற்றுலா சென்று வருவதற்கு பொள்ளாச்சி வழியாக இயக்கப்படுகின்றது.

பொள்ளாச்சியில் இருந்து பாரத் கௌரவ் இரயில் இன்று மாலை அதாவது மே 4ம் தேதி மாலை 6.20 மணிக்கு கிளம்பி மே 5ம் தேதி கோவாவிற்கு சென்றடையும். மீண்டும் மே 7ம் தேதி இரவு 9 மணிக்கு கோவாவில் மட்கோனில் இருந்து கிளம்பி மே 8ம் தேதி மதியம் 1.25 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும் என தகவல் கிடைத்துள்ளது.