கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்ட அவருடைய உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தார்கள்.
இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கென்று நிதி ஒதுக்கி கட்டுமான பணியை கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 8ஆம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஒ.பி.எஸ் அவர்களும் ஆரம்பித்து வைத்தனர்.
ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற கட்டமைப்புகள் உள்ளிட்டவை 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் 57.8 கோடி ரூபாய் பதிப்பீட்டில் கட்டப்பட்டு இருக்கின்றது. இந்த வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, புல்வெளி, நீர்தடாகங்கள், அலங்கார விளக்குகள், சுற்றுச்சூழல் போன்றவை அமைக்கப்பட்டு இருப்பதுடன் சிற்பகலைகளும் இடம்பெற்றிருப்பது.
கூடுதல் சிறப்பு. இந்த நினைவிடம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் சென்ற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது இந்த நினைவிட திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து பார்வையிட்டு சென்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ,ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் அவருடைய கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தடை செய்யப்பட்டதாக மறுதினமே அறிவிப்பு வெளியானது. இந்த சூழ்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
இன்று காலை முதல் பொது மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்ததாகவும், பலமுறை வந்து பார்த்தபோது பராமரிப்பு பணி நடப்பதால் மூடப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அம்மா அவர்களின் சமாதி பார்ப்பதற்காக வந்திருக்கிறோம் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள்.