கர்ப்பப்பை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை அனைத்துக்கும் தீர்வு அளிக்க இந்த ஒரு சிறிய மரத்துண்டு போதும்!!

Photo of author

By Sakthi

கர்ப்பப்பை பிரச்சனை முதல் மூட்டு வலி வரை அனைத்துக்கும் தீர்வு அளிக்க இந்த ஒரு சிறிய மரத்துண்டு போதும்!!

கருங்காளி மரத்தின் சிறிய துண்டு கட்டை நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. குறிப்பாக சர்க்கரை நோய், பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை பிரச்சனை, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளை இந்த மரத்துண்டுகள் குணமாக்கி விடும்.

 

இந்த பதிவில் கருங்காளி மரத்தின் சிறு துண்டுகளை பயன்படுத்தும் பொழுது என்ன நன்மைகள் கிடைக்கின்றது இதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் சரியாகின்றது என்று பார்க்கலாம்.

 

அந்த காலத்தில் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மை என்ற மரத்தினால் ஆன பொம்மையை வாங்கி கெடுப்பார்கள். அந்த பொம்மை இந்த ஈட்டி மரம் என்று அழைக்கப்படும் கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டது. இந்த மரத்தினால் ஆன பொம்மையை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடும் பொழுது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது. சளித் தொந்தரவு, ஆஸ்துமா தொந்தரவு ஏற்படாது. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கரைத்து வெளியேற்றும். குழந்தைகளுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் அதிகளவு இந்த பொம்மையின் மூலம் கிடைக்கின்றது.

 

இந்த கருங்காலி மரத்துண்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது…

 

இந்த கருங்காலி மரத்துண்டுகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி சிறிது துண்டாக உடைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒன்றரை கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த தண்ணீரில் இந்த மரத்துண்டை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

ஒன்றரை கப் தண்ணீர் முக்கால் கப் தண்ணீராக மாறும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதிக்க வைக்கும் பொழுது தண்ணீர் நிறம் மாறும்.

 

தண்ணீர் நிறம் மாறிய பிறகு இதை இறக்கிக் கொள்ளவும். குடிக்கும் பதத்திற்கு வரும் வரை இதை ஆறவைக்க வேண்டும். பிறகு இதில் திரிபலா பொடி கால் டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

இந்த மருந்தை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடித்துவிட்டு படுக்கலாம். இதை தொடர்ந்து குடிக்கும் பொழுது பல பிரச்சனைகள் குணமாகின்றது.

 

இந்த மருந்தை குடிக்கும் பொழுது கிடைக்கும் பலன்கள்…

 

* இந்த மருந்தை தினமும் குடிக்கும் பொழுது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றது.

 

* வயிற்றில் புழுக்கள் இருக்கும் பட்சத்தில் அந்த புழுக்களை அழித்து அதை வெளியேற்றுகிறது.

 

* இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது.

 

* வாதத்தினால் ஏற்படும் கை வலி, கால் வலி போன்ற பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.

 

* இந்த மருந்தை குடித்து வரும்போது சொரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் படிப்படியாக குணமடையும்.

 

* உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றுகிறது. உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்க உதவி செய்கின்றது. உடலில் உள்ள பித்தத்தை சரி செய்கின்றது.

 

* இந்த மருந்தை நாம் தொடர்ந்து குடிக்கும் பொழுது சாவசம் தொடர்பான பிரச்சனைகளை இது சரி செய்கின்றது.

 

* பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளையும் இந்த மருந்து குணப்படுத்துகின்றது. கர்பப்பை கட்டி, நீர் கட்டி போன்ற பிரச்சனைகளை இது சரிசெய்யும்.

 

* இந்த மரத்தில் இருக்கும் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி பாலில் கலந்து ஆண் பெண் இருவரும் குடிக்கும் போது குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.

 

* இந்த மருந்தை பெண்கள் தொடர்ந்து குடிக்கும் பொழுது கர்பப்பையில் இருக்கும் பூச்சிகள், அழுக்கு போன்றவற்றை நீக்கி கர்பப்பைக்கு நல்ல வலுவை கொடுக்கும். கர்பப்பைக்கு தேவையான இரும்புச்சத்தை இது கொடுக்கின்றது.

 

* வாய் துர்நாற்றத்தை இது சரி செய்கின்றது.

 

* அல்சர் நோய் உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அல்சர் நோய் முழுவதுமாக குணமடைந்து விடும்.

 

இந்த கருங்காலி மரத்துண்டுகளை எவ்வாறு எண்ணெயாக பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

கருங்காலி எண்ணெய் தயாரிக்கும் முறை…

 

அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதில் 50 மிலி கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

 

பிறகு இதில் ஒரு கருஙகாலி மரத்தின் ஒரு துண்டை சேர்த்துக் ஙொள்ளவும். பிறகு இதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் ஓமம், 5 பூண்டு துண்டுகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

நன்கு கொதித்த பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இந்த கருங்காலி மரத்துண்டை வீச வேண்டாம். எடுத்து வைத்து இன்னும் இரண்டு முறை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

 

இரவு தூங்கச் செல்லும் முன்பு இந்த எண்ணெயை சிறிதளவு எடுத்து வலி உள்ள இடத்தில் தேய்த்து விட வேண்டும். தொடர்ந்து இந்த எண்ணெயை தேய்த்து வரும் பொழுது நமக்கு ஏற்படும் வலிகள் குறையும். கழுத்து வலி, கை வலி, மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி, இடுப்பு வலி போன்ற வலிகளுக்கு பயன்படுத்தலாம்.

 

இதை பயன்படுத்தும் பொழுது இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.

 

இதை பயன்படுத்தும் பொழுது உடல் சோர்வு நீங்கும். தினமும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

 

இந்த எண்ணெயை தலைக்கு கூட தேய்த்து குளித்து வரலாம். தலைக்கு தேய்த்து குளித்து வரும்பொழுது பேன், பொடுகு, ஈறு போன்ற பிரச்சனைகள் இருக்காது.

 

தலைக்கு தேய்க்க வேண்டும் என்றால் கடுகு எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணையில் இதை தயாரித்து பயன்படுத்தலாம். முடி உதிர்தல் பிரச்சனைக்கு இது நல்ல தீர்வை கொடுக்கும்.

 

உடல் சோர்வாக உள்ளவர்கள் ஒரு நாள் முன்பே இரவில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீரில் இந்த கருங்காலி மரத்தின் துண்டை போட்டு வைக்கவும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரின் நிறம் பழுப்பு நிறமாக மாறி இருக்கும். இந்த தண்ணீரில் வெதுவெதுப்பான நீரை சிறிதளவு கலந்து குளிக்கலாம். இதை தினமும்.செய்து வந்தால் உடல் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். கை வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற பலவிதமான வலிகளும் குணமாகும்.