நடிகர் கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
“காக்க… காக்க… சுற்றுச்சூழலை காக்க, நம் மௌனம் கலைப்போம்” என இஐஏ-விற்கு எதிராக ட்விட்டரில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் வெகுண்டெழுந்துள்ள நிலையில், தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
“என்விரொண்மெண்டல் இம்பாக்ட் அஸ்ஸஸ்மெண்ட்” விதிகள் என்னும் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவ்வரைவானது சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஜூலை 28 ‘உழவன் பவுண்டேஷன்’ எனும் அமைப்பின் பெயரில் கார்த்தி வெளியிட்ட அறிக்கையில் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுகள் 2020” (Environmental Impact Assessment – EIA 2020) “இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு எதிராகவே அமைந்திருப்பதாகவே உள்ளது. இயற்கை வளங்களை அழித்து அதன் மூலம் தங்களது வளர்ச்சியினை உயர்த்திக் கொள்ளும் பொழுது, அடுத்த தலைமுறையினருக்கான சந்ததிகள் வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடும். இந்த வளர்ச்சியை அடையாளமாகக் காட்டும் போது எதிர்காலத்தில் மக்களின் வாழ்வியலுக்கு பெரும் கேடாக இருக்கும். இதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைவிட வேண்டும். இதனை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
மேலும் இந்த வரைவு அறிக்கையில் “மக்களின் கருத்துக் கேட்புக்கு இடமளிக்காமல், பொதுமக்கள் ஆலோசனையின்றி திட்டங்களை துவங்கலாம்” என்கிற இந்த சரத்தை ஏற்படுத்தித் தருவது, மக்களுக்கு பாதுகாப்பின்றி அவநம்பிக்கையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நம் சுற்றுப்புற சூழலைப் பற்றி, நம் இருப்பிடங்களை பற்றி நாம் பேசக்கூடாது என்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?” என கடும் அதிருப்தியில் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
தற்போது கார்த்தி வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டி சூர்யாவும் தனது கண்டனக் குரலை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க… காக்க… சுற்றுச்சூழலை காக்க… மௌனம் கலைப்போம்”
என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020 https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020
#EIA2020 pic.twitter.com/GlKDRFXY6Q
— Karthi (@Karthi_Offl) July 28, 2020