மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
124
Full curfew from May 8th to May 16th! Sudden announcement issued by the Chief Minister!
Full curfew from May 8th to May 16th! Sudden announcement issued by the Chief Minister!

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.குறிப்பாக இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மக்களின் உயிர்களை பெருமளவு காவு வாங்கி வருகிறது.அதனையடுத்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில் மக்கள் நலன் கருதி ஊரடங்கையும் அமல்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அரசாங்கம் கூறி வருகிறது.மக்களுக்கு முன் உதாரணமாக அரசியல் தலைவர்களே முதலில் கொரோன தடுப்பு நடவடிக்கைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.அதனையடுத்து கட்டுக்குள் கொண்டு வரமுடியா காரணத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.மகாராஷ்டிரா,டெல்லி,ஆந்திரா ஆகியவற்றில் பகுதி நேர ஊரடங்கு,முழு ஊரடங்கு என அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து நமது தமிழகத்திலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இரவு ஊரடங்கையும்,ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.அனைத்து மாநிலங்களை விட தற்போது கேரளா விழிப்புணர்வு மேற்கொள்வதில் முன்னதமாக செயல்பட்டு வருகிறது.அந்தவகையில் குக்கூ குக்கூ என்ற பாடலை ரீகிரியேட் செய்து கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அதுமட்டுமின்றி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை வீண் செய்யாமல் சரியான விதத்தில் மக்களிடம் செலுத்தியதில் முதலிடத்தில் உள்ளனர்.

இதற்கு பிரதமர்  உள்பட பலர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.இந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாத தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.அதுமட்டுமின்றி அதிக அளவு ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இந்நிலை கட்டுக்குள் அடக்க முடியா காரணத்தினால் தற்போது கேரளாவில் மே 8-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த ஊரடங்கின் காலத்தில் மக்கள் அனைவரும்க் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என கூறியுள்ளார்.

Previous articleசூர்யாவின் 40-வது படத்திலிருந்து சூர்யா விலகல்!! நட்டத்தில் சன் பிக்சர்ஸ்!!
Next articleவிழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம்