நாளை முதல் 19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றக்கு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இன்று காலை வரையில், பாதிப்பு எண்ணிக்கை 3.92 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் முழு ஊரடங்கு ஒன்று தான் வழி என்று கூறினார்.
ஒடிசாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10,413 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் இன்று தொற்று பாதித்தவர்களின் 4.5 லட்சமாக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் நாளை முதல் மே 19ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் இதன் கட்டுபாடுகள் கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழுமையான பணிநிறுத்தம் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கின் போது, மருத்துவ காரணங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தவிர, சாலை வழியாக தனிநபர்களின் உள்-மாநில இயக்கம் தடைசெய்யப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மால்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.