இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
117

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தின் 5 மாதங்களுக்கு பிறகு இன்றிலிருந்து மாநிலத்திற்குள்ளேயான ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்திலுள்ள மாவட்டத்திற்கு, 13 ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அந்த 13 ரயில்களின் விவரங்களும் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

தெற்கு ரயில்வே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலின் முழுவிபரம்

1.ரயில் எண் 02679/02680 சென்னை – கோயம்புத்தூர் – சென்னை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்.

2.ரயில் எண் 02605/02606 சென்னை எக்மோர் – காரைக்குடி-சென்னை எக்மோர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்.

3.ரயில் எண் 06181 / 06182 சென்னை எக்மோர் – செங்கோட்டை – சென்னை எக்மோர் வாரத்திற்கு மூன்று முறை வாராந்திர சிறப்பு ரயில்.

4.ரயில் எண் 02675/02676 சென்னை-கோயம்புத்தூர்-சென்னை சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு

5.தொடர்வண்டி எண் 02637/02638 சென்னை எக்மோர் – மதுரை சென்னை எக்மோர் சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் ரயில்.

6.ரயில் எண் 02084/02083 கோயம்புத்தூர்-மயிலாடுதுறை – கோயம்புத்தூர் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (செவ்வாய் கிழமைகளைத் தவிர)

7.ரயில் எண் 02627 / 02628 திருச்சிராப்பள்ளி – நாகர்கோயில் – திருச்சிராப்பள்ளி சூப்பர் ஃபாஸ்ட் தினசரி சிறப்பு ரயில்

8.ரயில் எண் 02673/02674 சென்னை – கோயம்புத்தூர் – சென்னை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்.

9.ரயில் எண் 02693/02694 சென்னை எக்மோர் – தூத்துக்குடி – சென்னை எக்மோர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்.

10.ரயில் எண் 06795/06796 சென்னை எக்மோர் – திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சிறப்பு ரயில்.

11.ரயில் எண் 02635/02636 சென்னை எக்மோர் – மதுரை – சென்னை எக்மோர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்.

12.ரயில் எண் 02671 / 02672 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை செண்ட்ரல் – மேட்டுபாளையம் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை செண்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் தினசரி சிறப்பு ரயில்.

13.ரயில் எண் 02633 / 02634 சென்னை எக்மோர் – கன்னியாகுமரி – சென்னை எக்மோர் தினசரி சிறப்பு ரயில்.

மேலே கூறியுள்ள 13 சிறப்பு ரயில்கள் மாநிலத்திற்குள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மக்களின் கவனத்திற்கு!

*ரயில் நிலையத்தில் உடல் வெப்பநிலை போன்ற பரிசோதனைகள் செய்வதால் பயணிகள்,ரயில் நிலையத்திற்கு குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்துவிட வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

*பயணிகள் அனைவரும் “ஆரோக்கியா சேது”செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*ரயிலில் துணிகள்,போர்வைகள்
மற்றும் திரைச்சீலைகள் போன்றவற்றை வழங்கப்படமாட்டாது.எனவே ரயிலில் பயணிப்பவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களுடன் கூடிய பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

*ரயில் நிலையத்திற்கு வரும் மக்கள் மற்றும் ரயிலில் பயணிக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம்,முக கவசங்களை அணிந்து இருக்க வேண்டும்.

Previous articleதொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி
Next articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : நம்பர் ஒன் வீரர் திடீர் தகுதி நீக்கம்